Wednesday, August 20, 2014

வாழைப்பழம் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம்


வாழைப்பழம் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம்இந்திய அளவில் வாழைப்பழம் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம் பெற்றிருக்கிறது. சுமார் 80,00,000 டன்கள் தமிழ்நாடு உற்பத்தி செய்துள்ளது. இதையடுத்து மஹாராஷ்டிரா 40,00,000 டன்கள் உற்பத்தி செய்துள்ளது. இந்தியாவின் மொத்த உற்பத்தி 3 கோடி டன்களாக இருக்கிறது. இதில் மிகச் சிறிய அளவே ஏற்றுமதி செய்யப்படுகிறது. மற்றதெல்லாம் இந்தியாவிலேயே உபயோகப்படுத்தப்படுகிறது. ஏற்றுமதி வெரைட்டியை பயிரிட முயற்சி செய்து ஏற்றுமதி செய்யுங்கப்பா.... இந்திய வாழைப்பழமும் உலகளவில் பெயர் பெறட்டும்.

Monday, August 18, 2014

ஜம்மு காஷ்மீர் பழங்கள் ஏற்றுமதி


ஜம்மு காஷ்மீர் பழங்கள் ஏற்றுமதிஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பழங்கள் ஏற்றுமதி வருடத்திற்கு 4200 கோடி ரூபாயாக கூடியுள்ளது. அதிகப்படியாக ஆப்பிள்களை ஏற்றுமதி செய்து வருகிறது. மேலும்இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் உபயோகிக்கும் ஆப்பிள்களில் 90 சதவீதம் அந்த மாநிலத்தில் இருந்து தான் வருகிறது.


திராட்சை ஏற்றுமதி

திராட்சை ஏற்றுமதி


வாய்ப்புக்களை எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்கு நாசிக் ஒரு உதாரணம். இந்தியாவிலேயே அதிக அளவு திராட்சை ஏற்றுமதி செய்யும் மாநிலம் மஹாராஷ்டிரா தான். இந்த வருடம் ஐரோப்பாவில் சீட்லெஸ் திராட்சைக்கு பற்றாக்குறை வந்துள்ளது என்று தெரிந்தவுடன் அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டது நாசிக்கிலுள்ள ஏற்றுமதியாளர்கள் தாம். உடனடியாக களத்தில் இறங்கி பெருமளவில் ஏற்றுமதி செய்யத் தொடங்கினார்கள். அது வெற்றியாக மாறியது. யூரோ புரூட்ஸ் என்ற திராட்சை ஏற்றுமதியாளர் கடந்த 21 வருடமாக ஏற்றுமதி செய்து வருகிறார். ஆனால் அவர் என்ன சொல்கிறார் தெரியுமாஒவ்வொரு வருடமும் ஏற்றுமதியில் வேறு வேறு சேலஞ்ச்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்று.


Euro Fruits
Tel: +91 22 2520 7838
Fax: +91 22 2520 5080
Email: nitin@eurofruits.com
www.eurofruits.com
Saturday, August 16, 2014

இந்தியா நைஜீரியா மருந்து ஏற்றுமதி

இந்தியா நைஜீரியா மருந்து ஏற்றுமதி
  


இந்தியாவிலிருந்து நைஜீரியாவிற்கு கடந்த வருடம் 307 மில்லியன் டாலர் மருந்துப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. நைஜீரியா அதிகமாக மருந்துப் பொருட்களை இந்தியாவிலிருந்த்து தான் இறக்குமதி செய்து வருகிறது. சமீபத்தில் அங்குள்ள இந்திய தூதரகம் ஒரு வாங்குபவர், விற்பவர் சந்திப்பை நடத்தியது. அதில் 70 இந்திய கம்பெனிகள் கலந்து கொண்டன. முக்கியமான விஷயம் அதில் 1000 வாங்குபவர்கள் கலந்து கொண்டது தான். வாய்ப்புக்கள் உள்ள நாடு. அதே சமயம் போலி இறக்குமதியாளர்கள் அதிகம் உள்ள நாடு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Friday, August 15, 2014

ப்ளாக்கில் 500 வது மெம்பர் ஆகப்போவது யார்?

எனது ப்ளாக்கில் 498 பேர் இதுவரை மெம்பராக உள்ளார்கள். 500 வது நபராக யார் மெம்பராக ஆகப்போகிறார்களோ அவருக்கு எனது புத்தகம் ஒன்று பரிசாக அனுப்பி வைக்கப்படும். அவர் எனது ப்ளாக்கில் மெம்பராக ஆனவுடன் அவருடைய ஈமெயில் விலாசத்தை எனது ஈமெயில் ஐ.டி.க்கு அனுப்பவும் sethuraman.sathappan@gmail.com.  அன்புடன் சேதுராமன் சாத்தப்பன்

டிரேடு ஜர்னலில் விளம்பரங்கள் செய்தால் ஏற்றுமதி வாய்ப்புக்கள் கிடைக்குமா?

அருண்
கரூர்
 
கேள்வி
டிரேடு ஜர்னலில் விளம்பரங்கள் செய்தால் ஏற்றுமதி வாய்ப்புக்கள் கிடைக்குமா?

பதில்
டிரேடு ஜர்னல் என்பது நீங்கள் தயாரிக்கும் பொருட்கள் சம்பந்தப்பட்ட துறை வெளியிடும் மாதந்திர அல்லது காலாண்டு பத்திரிக்கையாக இருக்கும். அதில் உங்கள் பொருட்களைப் பற்றிய விளம்பரங்களை வெளியிடும் போது அது உங்கள் துறையைச் சேர்ந்தவர்கள் பலர் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆதலால் உங்கள் வியாபார வாய்ப்புக்கள் பெருக வாய்ப்பு உண்டு. செய்யலாம் ஆனால் சில சமயங்களில் கட்டணங்கள் கூடுதலாக இருக்கும்.

பாவா மூப்பன் - 1000 முறை படிக்கப்பட்ட ஏற்றுமதி செய்தி

பாவா மூப்பன்


பாவா மூப்பன்

கேரளாவில் திரூர் என்ற ஊரிலிருக்கும் 65 வயது முதியவர் பாவா மூப்பன் என்பவர் காலையில் எழுந்தவுடன் தினசரி அன்றைய பேப்பர்களில் பார்ப்பது என்ன தெரியுமா பாகிஸதான் சம்பந்தப்பட்ட நல்ல, கெட்ட செய்திகளைத் தான். ஏனெனில் அவர் வாரம் 5 டன் வெற்றிலையை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். இந்தியாவிலிருந்து அதிக அளவு பாகிஸ்தானுக்கு வெற்றிலை ஏற்றுமதி செய்பவர் இவர் தான். இவரிடமிருந்து இரண்டு விஷயங்கள் நாம் கற்றுக் கொள்ள வேண்டும். ஒன்று இந்த வயதிலும் இவ்வளவு சிறப்பாக செயல்படுவது, இரண்டாவது இரண்டு நாடுகளுக்கிடையே ஆன செய்திகளை தெரிந்து கொள்வதில் காட்டும் முக்கியத்துவம். 

செய்திகள் மிகவும் முக்கியம். பாகிஸ்தானில் ஏதாவது பிராபளம் என்றால் அந்த வாரம் வெற்றிலை ஏற்றுமதி குறைந்து விடும், அதை என்ன செய்வது என்று அவர் யோசிக்க வேண்டும்.